நடந்து முடிந்த மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதனை படைத்து தேசிய மட்ட போட்டிகளிற்காக தெரிவாகியுள்ள காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையினை சேர்ந்த தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவிகளான செல்வி.P.Vaarsnehee, செல்வி.T.Rojika மற்றும் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவியான செல்வி.S.Nilujiga ஆகிய மாணவிகளை கௌரவித்து மாலையணிவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் பாடசாலையின் முதல்வர் திருவாளர் சதாசிவம் ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி.T.குலேந்திரன் அவர்களும் மற்றும் பாடசாலையின் கல்விசார், கல்விசார ஊழியர்களும், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 1 ஏப்ரல், 2025

மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் காரைதீவு மாணவிகள் சாதனை !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*