காரைதீவு 05ம் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையினை நடத்துவதற்காக காரைதீவு CST Fancy நிறுவனத்துக்கு இன்று 12.02.2025 ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து சமய நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சம்பிரதாயபூர்வமாக தொழிற்சாலை வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தொழிற்சாலைக்கான ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு நாளை 13.02.2025 நடைபெற உள்ளது.