கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2025ம் ஆண்டிற்கான வருடாந்த தைப்பொங்கல் தின பீச் ( Beach Volleyball) கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி காரைதீவு கடற்கரையில் இடம்பெற்றது.
கழகத் தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கழகப்போசர்களான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வி.இராஜேந்திரன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி..சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இறுதி போட்டியில் கேஎஸ்ஸி விஎஸ்ஸி அணிகள் பங்கேற்கின்றன.
இவ்வாண்டின் சாம்பியனாக கேஎஸ்ஸி தெரிவானது.
விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்ஷன் மத்தியஸ்தராக செயற்பட்டார்.
கழக செயலாளர் எஸ்.கிருஷாந்த் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந் உள்ளிட்ட கழக வீரர்களும் கலந்து கொண்டனர்.