காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், க.கோடீஸ்வரன், எம்எஸ்
உதுமாலெப்பை ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை பிரதேச செயலாளர் ஜி.அருணன் ஒழுங்கு செய்திருந்தார்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்திலுள்ள சகல திணைக்களங்களினதும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் திணைக்களங்கள் வாரியாக தனித்தனியாக ஆராயப்பட்டு முடிவுகள் மெற்கொள்ளப்பட்டன.