இக் கலந்துரையாடலானது திங்கட்கிழமை (03-02-2025) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் காரைதீவு வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன் போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிபிபீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. M C M மாகிர் மற்றறும் பிராந்திரிய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் N M இப்காம் (Eng) உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்திய சாலையின் தேவைகள், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போதைய சவால்கள் என்பன பற்றி ஆராயப்பட்டது. இது தொடர்பாக வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு செயலாளர் திரு செல்லையா இராசையா கருத்து தெரிவிக்கையில், "இம் முறை கலந்துரையாடலின் போது மிகவும் இலகுவான முறையில் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன் பல வைத்திய உபகரணங்களும், தளபாடங்களும் உடனடியாக வழங்கி வைக்கப்பட்டன" என தெரிவித்தார். இக் கலந்துரையாடலானது முடிய முன்னரே எங்களால் கோரப்பட்ட emergency drug trolley வழங்கி வைக்கப்பட்டதை நம்பவே முடியவில்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரதேச வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் எமது எதிர்பார்புகளில் 80 வீதம் முழுதாக நிறைவேற்ற பட்டுள்ளதுடன் மிகுதி 20 வீத கோரிக்கைகளும் நிச்சயமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் குழுவினரால் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.