காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் 37வது ஆண்டு வருடாந்த கழக இரவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கௌரவ தலைவர் திரு V.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் போது விவேகானந்தா விளையாட்டுக்கழகம் இந்த வருடம் இரண்டு இறுதிப் போட்டிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்காகவும் சாய்ந்தமருது OG விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டமைக்காகவும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றதோடு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் புதிதாக இணைந்து கொண்ட 60 இளம் வீரர்களுக்குள் 2 சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான விருதும் வழங்கி வைக்கப்பட்டது விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் 2024 ஆம் ஆண்டு சமூக சேவை செயற்பாட்டிற்கான விருதினை சிரேஷ்ட உறுப்பினர்
திரு S.ஜீவானந்தம் மற்றும் இளம் வீரான திரு J.ஜதுர்சன் அவர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கடினபந்து கிரிக்கெட் வீரராக
திரு R.சஞ்சய் அவர்களுக்கும் விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டதோடு எதிர்வரும் காலங்களில் சகல சேவைகளையும் முன்னெடுத்து செல்வதற்கான வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து நேரடியாக 2025 கான நிர்வாகத் தெரிவுகள் இடம் பெற்றிருந்தது
2025 கான தலைவராக மீண்டும் V.தயாபரன் தெரிவு செய்யப்பட்டு புதிய செயலாளர் திரு .M.குமுதன் ,பொருளாராக J.சோபிதாஸ் தெரிவு செய்யப்பட்டார்கள். இறுதியாக புதிய செயலாளரின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் இது நிறைவு பெற்றது.
VSC Media 🎤🎤🎤