"Clean Sri Lanka" தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ம் ஆண்டின் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று2025.01.01 காலை 9.00 மணிக்கு காரைதீவு பிரதேச சபை அலுவலகத்தில், சபையின் செயலாளர் திரு.அ.சுந்தரகுமார் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தேசிய கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.