சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை நிகழ்வு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 1 ஜனவரி, 2025

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை நிகழ்வு !!!

அம்பாரை மாவட்டத்தின் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை மக்கள் வெகுவிமர்சையாக இன்று வரவேற்றனர்


சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் விஷேட வழிபாடுகளும் இடம்பெற்றன.


சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் விஷேட வழிபாடுகளை திருச்சிலுவை திருத்தல பங்குதந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் நிறைவேற்றி வைத்தார்.


இதன்போது நாட்டில் நிரந்தர, நீடிய சமாதானம் கிடைக்கவும், அரச தலைவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் வெற்றியளிக்கவும், இன, மத, மொழி வேறுபாடின்றி ஒவ்வொருவரும் உள்ளார்ந்த உணர்வோடு வாழவும் பிரார்த்திக்கப்பட்டது.


நள்ளிரவு திருப்பலியிலும், புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் கன்னியர்மட அருட்சகோதரிகள், பங்குமக்கள் என பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதன்போது ஓருவருக்கொருவர் தமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.


இயேசு நாதர் அறையப்பட்டு மரணித்த திருசிலுவையின் ஒரு பகுதி இந்தியாவிலுள்ள கோவை நகரிலிருந்து பெற்றக்கனி என்பவரால் எடுத்துவரப்பட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது இவ் ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.

படங்களும் செய்தியும் - டினேஸ் 

















Post Bottom Ad

Responsive Ads Here

Pages