இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது 21.12.2024ம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் பங்கு பற்றி வெற்றிப்பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் பிரதேச செயலாளரினால் 23.12.2024ம் திகதி கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் மாணவர்கள் விபரம்.
01. குழு நிகழ்வு - நாடகம் - இரண்டாம் இடம்( தேசிய மட்டம்) ( முருகன் ஐக்கிய சங்க அறநெறிப் பாடசாலை)
*பங்கு பற்றிய மாணவர்கள்.
1. K. வர்ஷா
2. S. மதுராந்தகி
3. S. தேஜன்யா
4. D. பதுசாயினி
5. S. கம்ஷிகா
6. S. லேனுஷா
7. S. லேக்சா
8. A. கனிஷ்கா
9. S. டோஜிகா
10. P. குகதீஸ்
11. T. தினோஸ்காந்
12. N. தர்சிகா
13. N. யோஜனா
02. கட்டுரை - 1ம் இடம் - கண்ணகி அறநெறிப் பாடசாலை
ச.யகாத்மிகா - ( தரம் - 10 )
03. சித்திரம் - 1ம் இடம் - இந்து கலாசார ஒன்றிய அறநெறிப்பாடசாலை.
V. பிருஷாந் - ( தரம் - 10 )
04.பேச்சாற்றல் - 2ம் இடம் - இந்து சமய விருத்தி சங்க அறநெறிப்பாடசாலை
இ. ஜோதிர்மயி ( தரம் - 09)
05. கதாப்பிரசங்கம் - 3ம் இடம் - இந்து கலாசார ஒன்றிய அறநெறிப்பாடசாலை.
ஜ.சதுஷிகா ( தரம் - 09 )
இந்நிகழ்வுகள் அனைத்தும் காரைதீவு பிரதேச செயலாளர் G.அருணன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி,மற்றும் பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் L .சிவலோஜினி அவர்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வுக்கு செல்வதற்கான போக்குவரத்து, மற்றும் ஏனைய உதவிகள் காரைதீவு ASCO அமைப்பினரும் கண்ணகியம்மன் ஆலய தர்மகர்த்தா இ.குணசிங்கம் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.