சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நல்லிரவுத் திருப்பலி 24-12-2024 நல்லிரவு 11:45 மணிக்கு ஆரம்பமானது.
கிழக்கிலங்கையின் பழமைவாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மக்கள் நேற்று நள்ளிரவு வெகுசிறப்பாக கொண்டாடினார்கள்.
இதன்போது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து நற்கருணை ஆராதனை இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். இத் இருப்பலியினை பங்கு மக்கள் சிறப்பித்ததுடன், நிறைவில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் குழுக்கள் முறையிலான சீட்டிலுப்பு இடம்பெற்று அதில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், அருட்சகோதரிகளும், ஏராலமான மக்களும் கலந்து கொண்டனர். அத்துடன் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். மேலும் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும்
கிறிஸ்மஸ்தின நல்வாழ்த்துக்கள்......
செய்தியாளர்
க.டினேஸ்