கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகினற தேசிய இலக்கிய விருது வழங்கல் விழாவின் நிமிர்ந்தம் அம்பாரை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி முதலிடம் பெற்ற போட்டியாளர்களில் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றி அதில் வெற்றியீட்டிவர்கஞக்கான சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 2024.12.17ம் திகதி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜனாப் T.M. நிம் சான் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கலாசாரப்பிரிவின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.S.ஜெயராஜன் அவர்கஞம் விஷேட அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு G.அருணன் அவர்கஞம் சிறப்பு அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளார் S பார்த்தீபன் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் T கமலநாதன் அவர்களும் கலந்து கொண்டு வெற்றியடைந்தவர்களுகான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைத்தனர். மேற்படி போட்டியில் 6 பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 80 போட்டியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்