ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் 17வது கழக இரவும் வருடாந்த பொதுக்கூட்டமும் - 2024
.........................................
காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 2024ம் ஆண்டிற்கான கழக இரவும் வருடாந்த பொதுக்கூட்டமும் 28.12.2024 சனிக்கிழமை அன்று கழக அலுவலகத்தில் பிற்பகல் 7.00 மணியளவில் கழக இரவும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
அன்றைய தினம் நடைபெற்ற கழக இரவுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர்களுடன் சிறப்பு அதிதியாக NAITA சபையின் அம்பாறை மாவட்ட பரிசோதகர் திரு.க.செல்வப்பிரகாஷ் அவர்களும், விசேட அதிதியாக எமது கழகத்தின் போசகர் எஸ்..ஸ்ரீதரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களுடன் கழகத்தினுடைய சிரேஷ்ட உறுப்பினர்களும் மற்றும் கழக உறுப்பினர்களும் புதிய உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ் கழக இரவின் முதலாவதாக மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அடுத்ததாக செயலாளர் R.சுஜிதன் அவர்களினால் கடந்த ஆண்டிற்க்கான பொதுக்கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது இது சபையோரினால் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அடுத்ததாக தலைமை உரையினை நடப்பாண்டின் உப தலைவர் R.ரகிதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து எமது கழகத்தினுடைய செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் சிரேஷ்ட உறுப்பினர்களிற்கும் பிரதம அதிதியிற்கும் இடையில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து விசேட அதிதிகள் உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அதிதி உரை இடம்பெற்றது அதனை தொடர்ந்து கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்ற எமது கழக சிரேஸ்ட உறுப்பினர் எஸ்.கதன் அவர்களை பொன்னாடை போர்த்தி விசேட அதிதியால் கௌரவிக்கப் பட்டார். அதனை தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோடீஸ்வரன் அவர்களிற்கு கழக செயலாளர் R.சுஜீதன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்ட்டது. அதனை தொடர்ந்து பிரதம அதிதியின் உரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவு இடம்பெற்றது முதலாவதாக செயலாளராக இந்த வருடமும் ர.சுஜிதன் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அவரை கதன் முன்மொழிய சிருஸ்காந் வழிமொழிய தெரிவானார். அதனைத் தொடர்ந்து தலைவராக K.ஆதர்ஷன் அவர்களை சிருஸ்காந் முன்மொழிய ரகிதாஸ் வழிமொழிய தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக K.தனுசியன் அவர்களை டினேஸ் முன்மொழிய மகிந்தன் வழிமொழிய தெரிவு செய்யப்பட்டார். உப செயலாளராக T.சிருஸ்காந் அவர்களை ரகிதாஸ் முன்மொழிய சோபிதாஸ் வழிமொழிய தெரிவானார். அதனைத் தொடர்ந்து பொருளாளராக A.கௌதமன் அவர்களை சஞ்சீவன் முன்மொழிய விந்துஜன் வழிமொழிய தெரிவானார். அதனைத் தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களாக மஹிந்தன்,
விக்ரம்,
தோபிஸன்,
சோபிதாஸ் மற்றும் குகராஜ் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவானார்கள். அதனைத் தொடர்ந்து கடின பந்து தலைவராக ராஜ்பவான் அவர்களை சிருஸ்காந் முன்மொழிய சோவிதாஸ் வழிமொழிய தெரிவானார். கடினபந்து துறையினுடைய உபதலைவராக சோபிதாஸ் அவர்களை டினேஸ் முன்மொழிய சோபிதாஸ் வழிமொழிய தெரிவானார். மென்பந்து துறையின் தலைவராக என்.டினேஸ் அவர்களை ரகிதாஸ் முன்மொழிய சிருஸ்காந் வழிமொழிய தெரிவானார். மென்பந்து துறையின் உபதலைவராக சிருஸ்காந் அவர்களை ஆதர்ஷன் முன்மொழிய யதுஷன் வழிமொழிய தெரிவானார். கழகத்தின் கிரிக்கெட் முகாமையாளராக மீண்டும் ப.சஞ்சீவன் அவர்களை சிருஸ்காந் முன்மொழிய தோவிசன் வழிமொழிய மீண்டும் தெரிவானார். வொலிவோல் விளையாட்டின் தலைவராக P.யதுஷன் அவர்களும், கால்பந்து துறையின் தலைவராக K.விந்துஜன் அவர்களும், பட்மின்ரன் தலைவராக K.தனஞ்சயன் அவர்களும், களஞ்சிய பொறுப்பாளராக சோபிதாஸ் & மகிந்தன் அவர்களும், அணியின் ஒருங்கிணைப்பாளராக Y.ரிசிதரன் அவர்களும், பிரதேச விளையாட்டு போட்டிகளுக்கு பொறுப்பாக N.டினேஷ் அவர்களும் தெரிவானார்கள்.
கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களாக......
1.வருடாந்த சந்தாப் பணமாக வேலை செய்பவர்கள் மாததிற்கு 500.00 என்றும் வேலை செய்யாதவர்கள் 200.00 ரூபாய் என்று முடிவெடுக்கப்பட்டது.
2.கிரிக்கெட் கடினபந்து மற்றும் மென் பந்து சுற்றுப் போட்டிகள் நடத்துவது என்றும் இதற்கு பொறுப்பாக தலைவர்,செயலாளர்,கிரிக்கெட் தலைவர்,கிரிக்கெட் முகாமையாளர்,சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆகியோர் பொறுப்பாக்கப்பட்டனர்.
3.பட்மின்ரன் துறை விளையாட்டிற்கான பொருட்களை தலைவர் பெற்றுதருவதாக குறிப்பிட்டார்.
4.ஒவ்வொரு கிரிக்கற் சுற்றுபோட்டி முடிய புள்ளி அட்டவணைப் பட்டியல் கட்டாயம் வட்சப் குழுமத்தில் இடப்படல் வேண்டும்.
5.அடுத்த வருடம் முதல் ஒவவொரு வர்டமும் சிறந்த பந்து வீச்சு, சிறந்த துடுப்பாட்டம், ஆகியோரிற்கான பரிசளிப்பும் இடம்பெறுவதாக தீர்மானிக்கப் பட்டது.
நிர்வாக சபை தெரிவு மற்றும் தீர்மானங்களைத் தொடர்ந்து புதிய தலைவர் K.ஆதரஷன் அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து செயலாளரின் நன்றி உரையில் எமது கழக இரவிற்கான இராப்போசனம் வழங்கிய போசகர் எஸ்.சிறிதரன் அவரகளிற்கு விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்றைய கழக இரவில் அதிதிகளிற்கும் உறுப்பினர்களிற்குமான சிற்றூண்டி & குளிர்பானம் அத்துடன் கௌரவிப்புக்களிற்கான நிதி உதவி வழங்கிய போசகர் பே.வர்ணோதயன் அவர்களிற்கும் விசேட நன்றி தெரிவிக்கப்பட்டு புதிய நிர்வாக சபை உறுப்பினர்களிற்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு இராப்போசன விருந்துடன் பொதுக் கூட்டமும் கழக இரவும் இனிதே நிறைவானது.
R.சுஜீதன் B.A(Hons)
நடப்பாண்டின் கழக செயலாளர்
JKSC