TRAKS & ASCO சாதனையாளர் கௌரவிப்பு விழா -2024 ஆனது காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் 19-10-2024 சனிக்கிழமை பிற்பகல் 02:30 மணியளவில் திரு. A. விவேகானந்தராஜா (ஓய்வுநிலை உதவிப் பொறியியலாளர்) (தலைவர், TRAKS & ASCO) அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதி Dr. N. அகிலன் (பொது சத்திரசிகிச்சை நிபுணர் ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை) அவர்கள் கலந்துகொண்டார்.
நட்சத்திர அதிதிகளாக திரு. S. ஜெகராஜன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம்,அம்பாரை) அவர்களும், திரு. G. அருணன்(பிரதேச செயலாளர், காரைதீவு)அவர்களும், திரு. A. சுந்தரகுமார்(செயலாளர், பிரதேச சபை காரைதீவு) அவர்களும், திரு. A. பார்த்தீபன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், மகாணக் கல்வித் திணைக்களம்) அவர்களும், திரு. V. T. சகாதேவராஜா (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைதீவு) அவர்களும், திரு. I. இரட்ணகுமார் (ஆசிரியர், விபுலானந்த மகா வித்தியாலயம்,மல்வத்தை) அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும்,
விஞ்சைமிகு அதிதிகளாக Dr.(Mrs) மஞ்சுரேகா பிரசாந்தன் (ஆதார வைத்தியசாலை,கல்முனை வடக்கு) அவர்களும்,Dr. (Mrs.) கீர்த்திகா ரகுமதன்
(அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை,கல்முனை) அவர்களும்,
திரு. A. மகேந்திரராஜா (ஓய்வுநிலை BOC - முகாமையாளர் காரைதீவு) அவர்களும், Dr.(Mrs) மைத்ரி தினேஸ்காந்த் (ஆதார வைத்தியசாலை,கல்முனை வடக்கு) அவர்களும், Dr. V. றேணுபிரியக்ஷன் (ஆதார வைத்தியசாலை,திருக்கோவில்) அவர்களும், Dr. K. ஆதர்ஷன் (ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை) அவர்களும், திரு. S. மணிமாறன் (அதிபர், சண்முகா மகா வித்தியாலயம் காரைதீவு) அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன்,
வித்திய அதிதிகளாக திரு. T. தெய்வீகன் B. Sc. , திரு. K.ருத்திரமூர்த்தி B.Sc., திரு. S. தேவகுமார் M.Sc, R.Sc., திரு. E. சங்கீத் B.Sc.
திருமதி. J. சந்திரசேகரம் B.A. , திரு. S. பத்மநாதன் M.Ed. , திருமதி. S. றுசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இத்துடன் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிறப்பு கௌரவிப்புக்களும் பணப்பரிசில்களும் பதக்கங்களும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.