காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் முதலாவது சித்திரத் தேரின் வெள்ளோட்டம் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 9 செப்டம்பர், 2024

காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் முதலாவது சித்திரத் தேரின் வெள்ளோட்டம் !!!

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் முதலாவது சித்திரத் தேரின் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை காலை ஆலயத்தில் நடைபெற்றது.
வரலாற்றில் முதல் தடவையாக 39 லட்சரூபாவில் 21 அடி உயர பாரிய சித்திரத்தேர் ஒன்று ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவே காரைதீவு வரலாற்றில் முதலாவது சித்திரத்தேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் ஆலயத்தின் முன்னாள் பிரதம குரு யாழ்ப்பாணம் கோப்பாய் இருபாலை கற்பகப்பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தா அமரர் சிவஸ்ரீ இரத்தினசபாபதி சண்முகரெத்தினம் குருக்கள் வடிவாம்பிகை குடும்பம் சார்பாக இந்த அற்புதமான ஆன்மீக அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது .
அமரர் சிவஸ்ரீ சண்முகரெத்தினம் குருக்கள் இவ்வாலயத்தில் பல வருடகாலம் பிரதம குருக்களாக இருந்து நிறைந்த சேவையாற்றியவர். அவரது சிரேஸ்ட புதல்வர் வடக்கு கிழக்கில் மிகவும் பிரபலமான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தற்போது இவ் ஆலயத்தின் பிரதம குருவாக இருக்கிறார் . அவர் தற்சமயம் கனடாவில் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தில் பிரதம குருவாக செயற்படுகிறார்.
குறித்த சித்திரத்தேரின் வெள்ளோட்டம் இன்று 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஆலய பிரகாரத்தில் இடம்பெற்றது.
இந்த சித்திரத்தேரை வடிவமைத்த யாழ்ப்பாணம் கைதடி தச்சன்தோப்பைச் சேர்ந்த சிற்பாச்சாரி சுப்பிரமணியம் அஜந்தனை தேரிலேற்றி வெள்ளோட்டம் விடப்பட்டது. அவருக்கு ஆச்சாரியதிலகம் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறார்.
அதேவேளை நாளை 7 ஆம் தேதி சனிக்கிழமை காலை ஆலய வெளிவீதி பிரகாரத்தில் கன்னித் தேரோட்டம் இடம் பெறும்.
அதன்போது இத்தேரை குடும்பம் சார்பாக கையளிக்கும் மஹோற்சவ குருவான சுவிட்சர்லாந்து தூண் ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்படவிருக்கிறார். "விநாயக பக்தி கிரியாசாகரர்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறார்.
இதேவேளை வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மஹோற்சவ குருவான சுவிட்சர்லாந்து தூண் ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சமுத்திர தீர்த்தோற்சவம் துன் உற்சவம் நிறைவுபெறும் 



Post Bottom Ad

Responsive Ads Here

Pages