விபுலானந்த மணி மண்டபத்தில் களைகட்டிய கர்நாடக இசைக்கச்சேரி !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 4 செப்டம்பர், 2024

விபுலானந்த மணி மண்டபத்தில் களைகட்டிய கர்நாடக இசைக்கச்சேரி !!!

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும்  காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றமும் இணைந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவையொட்டி   நடத்திய கர்நாடக இசைக் கச்சேரி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது .

முன்னதாக கலைஞர்கள் சுவாமி விபுலானந்த அடிகளாரின் இல்லத்தில் விசேட பூஜை செய்து அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக இசைத் துறைசிரேஷ்ட விரிவுரையாளர் ஸ்ரீவிக்ரமகீர்த்தி திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் கலந்து சிறப்பித்தார் .

இந்தியாவில் இசைத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்ற அழகரெத்தினம் கல்யாண்சரண்( வாய்ப்பாட்டு ),சுதாகரன் கோவிசரண்( மிருதங்கம் ) ,பிரிசில்லா ஜோர்ஜ் ( வயலின்) ஆகியோர் இந்த கர்நாடக இசைக்கச்சேரியை ஒன்றரை மணி நேரம் முதல் தடவையாக சிறப்பாக நடத்தினர்.

நிகழ்வில் விபுலானந்த பணி மன்ற தலைவர் சோ.சுரநுதன தலைமையுரையாற்ற செயலாளர் கு.ஜெயராஜி அறிமுக உரையாற்றினார்.

 கர்நாடக இசைக் கச்சேரி தொடர்பான நயவுரையை பணி மன்றத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  நிகழ்த்தினார் .

இசைக் கச்சேரி நடாத்திய மூன்று கலைஞர்களுக்கும் விபுலானந்த பணி மன்றத்தினர் பொன்னாடை போர்த்தி விபுலனின் திருவுருவப்படம் பொறித்த நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
















Post Bottom Ad

Responsive Ads Here

Pages