கடவுச்சீட்டுகளைப் பெற புதிய முறை அறிவிப்பு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

கடவுச்சீட்டுகளைப் பெற புதிய முறை அறிவிப்பு !!!

 குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் புதிதாக அறிமுகப்படுத்திய இணையவழி பதிவு முறையை நீக்கி, கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறைமை குறித்து அறிவித்துள்ளது.

இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்பதற்காக பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறைக்கு அமைவாக குடிவரவுத் திணைக்களத்திற்கு வருகை தருவோரின் வரிசையின் அடிப்படையில், ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 400 கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 250 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெற்றுப் பக்கங்களைக் கொண்ட செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ள பொதுமக்கள், எதிர்காலத்தில் இ-பாஸ்போர்ட் முறை அமல்படுத்தப்படும் வரை, ஏற்கனவே உள்ள கடவுச்சீட்டை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில், 51 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் இணையவழி கடவுச்சீட்டு முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையின் கீழ், 15000 ரூபா செலுத்தி மூன்று நாட்களுக்குள்ளும் ரூ.5,000-க்கு 14 நாட்களுக்குள்ளும் கடவுச்சீட்டை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இணையவழி கடவுச்சீட்டு முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதினால் இந்த முறை வெற்றியளிக்கவில்லை.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages