அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெயராஜன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,கணக்காளர்கள்,மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.