கடந்த 14.06.2024ம்திகதி பொத்துவில் லாகுகல பிரதேச நீலகிரி ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் அமரர் சிவகரன் அட்ஷயனுக்கு அவர் கல்வி கற்ற பாடசாலையான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இன்றைய தினம் 20.06.2024ம்திகதி காலை ஆராதனையின் பின் விஷேட அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இன்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டு மாணவன் அட்ஷயனுக்கு பூக்கள் பூ மாலைகள் வைத்தும் மெழுகுவர்த்தி சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை நடத்தினர்.