உகந்தை முருகன் ஆலயத்தில் வருடாந்த கொடியேற்ற உற்சவத் திருவிழாவின் உபயகாரர்களுடான ஒன்று கூடல் கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் திரு.ந.நவனிதராஜா தலைமையில் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கு. சித்தாராமன் குருக்களினால் உற்சவத் திருவிழா சம்பந்தமான பூஜை நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முகமாக
05 ம் திகதி பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு 06/07/2024 காலை 11மணியளவில் கொடி யேற்ற பூஜை இடம்பெற்று தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உற்சவ பூசைகள் இடம்பெற்று இறுதி நாள் 22/07/2024 தீர்த்தம் இடம் பெறவிருக்கின்றது.
அதனைத் தொர்ந்து வைரவர் பூசையும் 12/07/2024 அன்று காலை கும்பாபிஷேக தின சங்கபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.