காரைதீவில் கல்விச்சாதனையாளர் கௌரவிப்பு விழா !!!
காரைதீவு TRAKS மற்றும் ASCO அமைப்பின் வருடாந்த கல்விச்சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று(3) சனிக்கிழமை காலை காரைதீவில் நடைபெற்றது.
காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 09. 30 மணியளவில் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பொறியியயாளர் அ.விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
மேலும் நட்சத்திர அதிதிகள் , விஞ்சை மிகு அதிதிகள் , வித்திய அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு மூன்று ஏ பெற்ற மாணவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசும் ஏனைய மாணவர்களுக்கு ஏனைய பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.