தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 15.01.2024 திங்கள் அன்று விவேகானந்தா விளையாட்டு கழகத்தின்விவேகானந்தா லெஜென்ஸ் அணியினருக்கும் விவேகானந்தா ஜூனியர் அணியினருக்கும் இடையிலான T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில்ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில்
விவேகானந்தா இளைஞர் அணி வெற்றிவாகை சூடியது. சிறந்த துடுப்பாட்ட வீரராக கிஷோ அவர்களும் சிறந்தபந்து வீச்சாளராக ரமணிதரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டிக்கான அனுசரணையை விவேகானந்தா கழகத்தின் சிரேஷ்ர உறுப்பினர் வசிகரன் அவர்கள்வழங்கியிருந்தார்.
Info -VSC Media