காரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்து நடாத்திய போட்டிகள் இம்மாதம் 13,14,15ம் திகதிகளில் காரைதீவு விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றன.
கழக தலைவர் திரு.வி.விஐயசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் போட்டிகள் வெகு சிறப்பாக இடம்பெற்றதுடன் அதிதிகளாக கழகப் போசகர்களான காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் மற்றும் கழகத்தின் முன்னைனாள் தலைவர்கள் கழக சிரேஷ்ட கனிஷ்ட உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.