இம்முறையும் புலமைப் பரிசில் பரீட்சையில் காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை மீண்டும் சாதனை...
2023 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை இம் முறையும் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை சுவிகரித்துள்ளது.
கல்முனைக் கல்வி வலயத்தின் காரைதீவு கோட்டத்தினை உள்ளடக்கிய பாடசாலைகளில் இவ் ஆண்டில் நடைபெற்ற தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை மாணவிகளில் 14 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலையை கோட்ட மட்டத்தில் மீண்டும் முதலாம் இடத்தை பெற வைத்துள்ளனர்.
இச் செயற்பாட்டிற்கு களம் அமைத்த கல்லூரியின் முதல்வர் திரு.ஆர்.ரகுபதி, பிரதி முதல்வர் திரு.எஸ்.ரவீந்திரன், பகுதி தலைவர் வகுப்பு ஆசிரியர்களான திரு.ப.கிருஷ்ணகுமார், திருமதி.யோ.கணேசலிங்கம் மற்றும் தரம் 1 - 4 வரையான ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், EPSI இணைப்பாளர், ஆசிரியர் ஆலோசர்கள், பிரதி/உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
1.S.Nilujiga - 183
2.S.Pubeka - 177
3.K.Pirathiyuksha - 161
4.S.Ruthramoshani - 160
5.T.Neruja - 160
6.S.Mugethana - 159
7.S.Kishomikga - 157
8.R.Ruksika - 154
9.K.Abhishayie - 154
10.T.Rukshanuga - 152
11.T.Tharmeatha - 150
12.Y.Haashiine - 150
13.S.Narthana - 147
14.N.Kamsika - 146
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இணைய குழுவினரின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.