"வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க " என்ற வாக்கிற்கு இணங்க இன்றைய காலகட்டத்தில் எமது சைவ, கலை கலாசார விழுமியங்களானது மிகவும் அதல பாதாளத்தில் எங்கோ சென்று கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.
சேவற்கொடியோன் அமைப்பு (அம்பாறை மாவட்டம்), கிழக்கிலங்கை சொதற்பொழிவாளர் ஒன்றியம், இணை அனுசரனையாளராக அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு மற்றும் ஊடக அனுசரணையாளராக திருக்கோவில் திருவதிகை கலைக்கூடமும் ஒன்றிணைந்து "உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது" திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ஆரம்பமாக இருக்கின்றது.
இந்த நிகழ்வானது 2023.11.13 ஆம் திகதியில் இருந்து 2023.11.18 ஆம் திகதிவரையில் நடக்கவிருக்கின்றது.
ஒவ்வொரு விரத நாளிலும் கந்தபுராணம் பாடுவதற்கு முன்னராக,
## திருப்புகழ் பாடுவதும்,
## கலை நிகழ்ச்சி ஒன்றும்,
## அத்துடன் சிறு சொற்பொழிவும் நடக்க ஆயத்தமாக இருக்கின்றது.