காரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளி தினத்தை சிறப்பிக்கும் வகையிலும் மற்றும் கழகத்தின் 40ஆவது ஆண்டை நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்து நடாத்தும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நாள் போட்டிகள் இன்று கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி பூப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல வீரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டி நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று இறுதி போட்டிகள் இடம்பெறவுள்ளது.