வினாவிடைப் போட்டியில் சண்முகா முதலிடம்.
காரைதீவு கோட்ட பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவ மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையோடு இணைந்து எதிர்கால சவால்களை முறியடித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தினால் 2023-11-07 அன்று நடத்தப்பட்ட 20 வினாக்களைக் கொண்ட வினாவிடைப் போட்டியில் கமு/சண்முக மகா வித்தியாலயம் 9 இடங்களைப் பிடித்து கோட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிச்சென்றது . இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் சண்முகா பாடசாலையில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.