அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு கடந்த மூன்று மாத காலமாக நடத்திய பெண்கள் வலுவூட்டல் சார்ந்த சான்றிதழ் கற்கைநெறி யின் சான்றிதழ் வழங்கும் விழா இன்று(26) வியாழக்கிழமை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.
வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் காரைதீவு லேடிலங்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
டிஜே .அதிசயராஜ் கலந்து சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதிகளாகவும், வளவாளர்களாகவும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏசிஏ. அசீஸ் ,உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, மாவட்ட இணைப்பாளர் இர்பான், உளவளத்துறை உத்தியோகத்தர் ரி.சுதர்சன், இணைப்பாளர் மொகமட் ஷா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
பயிற்சிநெறியை மேற்கொண்ட 40 மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
( வி.ரி. சகாதேவராஜா)