இன்றைய தினம் காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சையினுடைய தேர்ச்சி அறிக்கையானது கல்லூரியின் பிரதி முதல்வர் திரு.த.ரவீந்திரன் தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இதன் போது முதல் கட்டமாக ஆரம்ப பிரிவு தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரையான மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.
அத்துடன் அனைத்து பாடங்களிலும் அதிதிறமைச் சித்திபெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய தினத்துடன் இரண்டாம் தவணை முடிவடைந்து எதிர்வரும் புதன்கிழமையன்று மூன்றாம் தவணை ஆரம்பமாக இருக்கின்றது