இன்றைய தினம் காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களினது சிறுவர் சந்தை நிகழ்வுகள் எமது பாடசாலையில் வெகு விமர்சியாக கல்லூரியின் முதல்வர் திரு.ஆர்.ரகுபதி சேர் தலைமையில் இடம்பெற்றது.
விசேட அதிதியாக ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஆலோசகர் சிவநாதன் சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கல்லூரியின் உப முதல்வர் திரு.த.ரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என சகலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்கள் தங்களிடமிருந்து பொருட்களை ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விற்பனை செய்த நிகழ்வுகள் இன்று பாடசாலையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது..