காரைதீவு விபுலானந்தா முன்பள்ளிப் பாடசா லையின் சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக ஓய்வு நிலை அதிபர் கே.புண்ணியநேசன் கலந்து சிறப்பித்தார். முன்னதாக. பெற்றோர்களால் வழங்கப்பட்ட பாடசாலை பெயர்ப்பலகையை பிரதம அதிதி ஓய்வு நிலை அதிபர் கே.புண்ணியநேசன் திறந்து வைத்தார்.
சிறப்பு அதிதிகளாக ஆசிரியர்களான ஜெய நிலாந்தினி, ரம்யா, சனுஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள். பெற்றோர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.