சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற வாணி விழா !
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இந்து சமயக் குழு ஏற்பாடு செய்த நவராத்திரி விழா வைத்தியசாலைகேட்போர் கூட மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
சத்திரை சிகிச்சை விசேட நிபுணர் நடேசன் அகிலன் தலைமையிலான இந்நிகழ்வில் பிரதம அதிதியாகசம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபாகலந்துகொண்டு சிறப்பித்தார்.
மகப்பேற்று விசேட நிபுணர் எல்.சி.ஆர். ரொகான், மருத்துவ உத்தியோகத்தர்கள், விசேட தர தாதியஉத்தியோகத்தர், தாதியர்கள், துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள்உட்பட பலரும் பூஜை மற்றும் சமய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
(சம்மாந்துறை நிருபர் ஐ எல் எம் நாஸிம்)