காரைதீவு பிரதேசத்தில் அண்மைக்காலமாக மிகமோசமான கடலரிப்பினால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் எமது பிரதேச செயலாளர் திரு.எஸ். ஜெகராஜன் சேர் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி அதிகார சபை பிரதிநிதி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், மீன்பிடி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், மதஸ்தலங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்குபற்றினர்.