இந்துசமயகலாசார அலுவல்கள் திணைகளம், காரைதீவு பிரதேசசெயலகம்,காரைதீவு விபுலானந்தாஞாபகர்த்தபணி மண்டபம் இணைந்து நடாத்தும் நவராத்திரிவிழா-2023.
இந்து சமய கலாச்சார திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் காரைதீவு விபுலானந்த பணி மன்றமும் இணைந்து மூன்றாவது வருடமாக தொடர்ச்சியாக நடத் துகின்ற நவராத்திரி விழா நேற்று (16) திங் கட்கிழமை மாலை இரண்டாவது நாளாக மணிமண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு இரண்டாவது நாள் பிரதம அதிதி யாக விபுலானந்தா மணி மண்டபஆலோ சகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
கதாபிரசங்கி நாகராஜா சனாதனன் பணி மன்ற உறுப்பினர்களான சிவராஜா நடராஜா மற்றும் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள். அறநெறி மாணவர்களின் கலை நிகழ்ச் சிகள் மேடையேறின. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட ச ரஸ்வதி படம் பொறித்த திருவுருவ படமும் பிரதம அதிதிக்கும் ஆசிரியைக்கும் வழங் கப்பட்டது.
மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஏற்பாட்டில் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.