அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலயத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கேதீஸ்வரன் ரோஹித் இந்த பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
காலியில் 2023.10.07 தொடக்கம் 2023.10.09 வரை நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கேதீஸ்வரன் ரோகித் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவினர்களுக்கிடையிலான கும்மிட்டே போட்டியில் வெங்கலபதக்கம் வென்றுள்ளார்.
இம் மாணவன் 36 வீரர்களுடன் போட்டியிட்டு 3ஆம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவனை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் வாழ்த்தி பாராட்டினார்.