தேசிய இளைஞர்கள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக மாவட்ட மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகள்அம்பாறை சோமாரெட்ன மைதானத்தில் இன்று (9) இடம்பெற்றது.
இப்போட்டிகளில் காரைதீவு பிரதேசசெயலக பிரிவு அணி வெற்றி பெற்று அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டனர். காரைதீவு அணி சார்பாக ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர்கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு அணியினர் பெற்றுகொண்டனர்.