கல்முனை கல்விவலயத்தில் காரைதீவு கோட்டத்தின் கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்திற்கான 13 இடங்களில் 05 இடங்களை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளது.
கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய மட்டத்திற்கு தெரிவானதற்கு மாணவர்களை ஊக்குவித்த சமூக விஞ்ஞான பாடஇணைப்பாளர் திரு.சத்தியகுமார்(அசோக் Sir)ஆசிரியருக்கும் ஏனைய ஊக்குவித்த சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்களையும் மாணவர்களையும் கல்லூரி அதிபர் திரு.ம.சுந்தரராஜன் அவர்கள் இன்று காலை கல்லூரிமண்டபத்தில் ஆராதனை நிகழ்வில் பாராட்டி கௌரவித்தார்.
அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்..