அம்பாறை மாவட்டத்தில் புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

அம்பாறை மாவட்டத்தில் புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்!

 

(பாறுக் ஷிஹான்)

யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர்  புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில்   நாவிதன்வெளி சொறிக்கல்முனை   பகுதிகளை ஊடறுத்து    யானைகள்   இவ்வாறு வருகை தந்துள்ளன.

இதன் போது  குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 12 க்கும் அதிகமான  யானைகள் அப்பகுதியில்  உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி   வருகை தந்திருந்தன.

தினமும்  அப்பகுதிக்கு வரும்  யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன்  இவ்வாறு வயல்வெளிகளை  நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

மேலும்   இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில்  தீ வைக்கப்படுவதனாலும் அங்கு  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 30 க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு  வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages