காரைதீவு பிரதேச நல்லிணக்க குழுவும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து எல்லைவீதியில் சமூக நல்லிணக்க சிரமதானம் ஒன்றை மேற்கொண்டது.
இச் சிரமதானம் மாளிகைக்காடு காரைதீவு எல்லை வீதியான சித்தானைக்குட்டி ஆலயத்திற்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள கரைச்சைப்பாலப் பகுதியில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இச் சிரமதான நிகழ்வில், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பாத்தீபன், காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அ. சுந்தரகுமார், சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின்
திட்ட இணைப்பாளர் ரி.ராஜேந்திரன், கள இணைப்பாளர் பி.ரோஹிணி, காரைதீவு பிரதேச நல்லிணக்க குழு இணைப்பாளர் எம். ஐ. றியால், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தார்கள், நல்லிணக்கம் குழு அங்கத்தவர்கள் உட்பட கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.
இச் சிரமதான நிகழ்வில் மாளிகைக்காடு, காரைதீவு எல்லை பிரதேசங்களில் போடப்படும் திண்ம கழிவுகளால் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்கும் நோக்குடன் விழிப்புணர்வு பதாதை ஒன்றும் போடப்பட்டுள்ளது.
இதனால் இவ்வீதியில் தற்போது குப்பைகள் வீசப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.
இச் சிரமதான நிகழ்வில் காரைதீவு பிரதேச நல்லிணக்க குழு அங்கத்தவர்கள், காரைதீவு பிரதேச சபை, மதஸ்தலங்கள், சமூர்த்தி சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் போன்ற கலந்து கொண்டனர்.