காரைதீவு மண்ணின் பெண்சாதனையாளர் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

காரைதீவு மண்ணின் பெண்சாதனையாளர் !!!

 

காரைதீவு மண்ணின் பெண்சாதனையாளர்!!

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் 2023ம் ஆண்டு சித்திரை மாதம் நடாத்தப்பட்ட பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் சித்தியடைந்த ஒரே ஒரு பெண்மணியான காரைதீவைச் சேர்ந்த அமரா். இளையதம்பி கனகசபை-பத்மாவதி தம்பதியினரின் மகளான திருமதி. பராபரம் துளசிரஞ்சன் (ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை, கல்முனை)

சாதனையாளரான திருமதி.பராபரம் துளசிரஞ்சனின் தந்தையான அமரா். இளையதம்பி கனகசபை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் சந்ததியைச் சேர்ந்தவராவார். முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணின் முதல் முறையாக பெண்மணி சைவப்புலவர் என்ற பெருமையையும் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மாணிக்க சந்தானத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்

அத்துடன் 2020ம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை சைவப்புலவர் பரீட்சையில் இளம் சைவப்புலவர் என்ற பட்டத்தையும் 2021ம் ஆண்டு கொழும்பு திருவாவடுதுறை ஆதீனத்தால் நடைபெற்ற சைவ சித்தாந்த பரீட்சையிலும் "சித்தாந்த ரத்தினம்" என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அமரா் கனகசபை பத்மநாதன் அவர்களின் தங்கையும் ஆவார்.
இவருக்கு காரைதீவு இணையக்குழு சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்... 

See less


Post Bottom Ad

Responsive Ads Here

Pages