தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு !!!

 

காரைதீவு இலங்கை வங்கி கிளையில் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு இலங்கை வங்கி கிளையின் முகாமையாளர், திருமதி. யாழினி மோகனகாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக திருமதி.H.G. குமுதினி (இலங்கை வங்கி மாவட்ட முகாமையாளர், அம்பாரை), திருமதி. வரணியா சாந்தரூபன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர், கல்முனை வலயம்) திரு.S.மணிமாறன் (அதிபர் கமு/சண்முகா மகா வித்தியாலயம், காரைதீவு) , திரு.T.யோகநாதன் (அதிபர் கமு/இ. கி. ச. ஆண்கள் பாடசாலை, காரைதீவு) மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\


Post Bottom Ad

Responsive Ads Here

Pages