காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய அமரர் திரு திருமதி அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ண முக்கோண சுற்றுப் போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக ஹொக்கி அணிகள் பங்கேற்றது .
இந் நிகழ்வு காரைதீவு விபுலானந்த மைதானத்தில் தலைவர்
தவராசா லவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக ஆண் ,பெண் ஹொக்கி அணியினரும், காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணியினரும் மூன்று போட்டிகளில் மோதினர்.
முதல் இரண்டு இரண்டு போட்டிகளில் காரைதீவு அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
பிரதமர் அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து சிறப்பித்தார்.
ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் வளர்ச்சி அதன் ஸ்தாபக தலைவர் த.லவனின் அதீதமான அயராத முயற்சி மற்றும் அதன் சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் அ.
மகேந்திரராஜா, அஸ்கோ அமைப்பின் தலைவர் ஏ. விவேகானந்தராஜா, செயலாளர் ச. நந்தகுமார், பொருளாளர் அ.சுந்தரராஜன், இணைப்பாளர் ரி.புவனேந்திரராஜா, ஆசிரியர் எஸ்.பாஸ்கரன், விளையாட்டு உத்தியோகத்தர் வி.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கிழக்கு பல்கலைக்கழக ஹொக்கி பயிற்றுவிப்பாளர் எஸ்.கிருஸ்ணபிரபு விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வீரர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.