காரைதீவு பிரதேச நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
எம். ஐ. றியால் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்துரையாடலில், சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரி. தயாபரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ரி. ராஜேந்திரன், காரைதீவு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். குணாரெட்னம், மாவடிப்பள்ளி ஜும்மாப்பள்ளி தலைவர்,கிராம மட்ட அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் என பலரும் விழிப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.