காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை சிறப்பிக்கும் வகையில் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவுடன் இணைந்து நடாத்திய *“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”* இரத்ததான நிகழ்வானது வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் குருதித் தேவைப்பாட்டினை அறிந்து குருதிக் கொடையாளர்கள் வருகைதந்து இவ்இரத்ததான நிகழ்வானது சிறப்புற ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
இவ்இரத்ததான நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கிய குருதிக் கொடையாளர்கள், எமது பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை சமூகம், பொது மக்கள், பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழங்கள், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவினருக்கும் மற்றும் பலவகைகளிலும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.