காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் க.பொ.த(சா/த) மாணவர் தின நிகழ்வு.
===========================
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் க.பொ.த(சா/த) மாணவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.சுந்தரராஜன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (18) கல்லூரியின் ஆரதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்(திட்டமிடல்) வரணியா சந்தரூபன்,காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே.டேவிட் ,பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்சன் உட்பட பிரதி,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்முறை க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.