கதிர்காமம் ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை 2023.06.12ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது 24ஆம் திகதி மூடப்படும். இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
எதிர்வரும்2023.06.12ம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு இடம்பெறும் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு உத்தியோகப் பூர்வமாக காட்டுவழிப்பாதை யாத்திரிகர்களுக்காக திறந்துவிடப்பட இருக்கின்றது.
அன்றைய தினம் பி.ப 3 மணிக்கு மூடப்படும் பாதை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் மாதம் மாதம் 24ம் திகதி வரை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் அம்பாறை அரச அதிபர் மொனராகல மாவட்ட செயலக பிரதிநிதி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆலய பிரதமகுரு, குருக்கள் பாணமை விகாராதிபதி வண ஆலயதலைவர்
பொத்துவில், லாஹூகல, ஆலயடிவேம்பு ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் பிரதிநிதி, வன இலாகாவின் பிரதிநிதி, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, லாஹூகல பிரதேச சபையின் பிரதிநிதி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிரதிநிதி, மொணறாகலை மாவட்ட செயலகத்தின் பிரதிநிதி ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மற்றும்