காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய 2023 ற்கான அமரர் பேரின்பம் சர்மேந்திரன் ஞாபகார்த்த கிண்ண கடின பந்து கிரிக்கெட் இறுதி சுற்றுப்போட்டியானது 14.05.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 2.00 மணி அளவில் கமு/விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. திரு.ந.டினேஸ் ( தலைவர்,காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக கெளரவ.கவீந்திரன் கோடீஸ்வரன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், முதன்மை அதிதியாக திரு.சிவ.ஜெகராஜன்( பிரதேச செயலாளர், காரைதீவு) அவர்களும் நட்சத்திர அதிதிகளாக திருமதி.பேரின்பம் சாரதாதேவி(ஓய்வு நிலை தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்) அவர்களுடன் இணைந்து மேலும் பல அதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
32 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் நிந்தவூர் லகாண் விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டகார்ராக சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீர்ர் எஸ்.எம்.அவஹாம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், சுற்றுத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீர்ராக காரைதீவு விளையாட்டு கழக வீர்ர் ஆ.லோகதாஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். மேலும் சுற்றுத்தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும் தொடரின் சிறந்த வீர்ராகவும் சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீர்ர் எச்.ஆர்.எம்.இஸ்மத் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
படங்கள்-சுதாஜனன்