காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் ASCO அமைப்பும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி - 2023 காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி மைதானம் காலம் 06.05.2023 மாலை 4.30 கழகத்தலைவர் யா.டிலக்சிகன் அவர்களின் தலமையில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் அணிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதிகளாக திரு. S. ஜெகராஜன் (பிரதேச செயலாளர் காரைதீவு), திரு. A. சுந்தரகுமார் (செயலாளர்,பிரதேச சனா காரைதீவு) அவர்களும் கலந்து கொண்டதுடன்,
கௌரவ அதிதிகளாக திரு. C. நந்தகுமார் (சேயலாளர் ASCO), திரு. P. புவனேந்திரராஜா (இனைப்பாளர் ASCO), திரு. K. யோகராஜா (தலைவர்,சிவானந்தா விளையாட்டுக்கழகம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு அதிதிகளாக திருV. T. சகாதேவராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர்), திரு.V.இராஜேந்திரன் (உத்தரவு பெற்ற நில அளவையாளர்), திரு. அஜித் குருப் (இலங்கை கூடைப்பந்தாட்ட அணியின் சிரேஷ்ட பயிற்சிவிப்பாளர்) திரு. V. பாஸ்கரன் (விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக திரு.Y.கோபிகாந்த் (தலைவர், ப.நோ.கூ. சங்கம்,காரைதீவு), திரு.S. நேசராஜா தலைவர் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்) திரு. S. அருட்சிவம் (தலைவர்,றிமைன்டர் வினளயாட்டுக்கழகம்) மற்றும் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதியாக திரு.டேனியல் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.