விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி !

விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 36-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு
“சுதா-விக்கி”(அமரத்துவம் அடைந்த K.சுதாநிதி, V.விக்கினேஸ்வரன்)ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி சனிக்கிழமை 22-04-2023 விபுலானந்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் கழகத்தின் கௌரவத் தலைவர்
லயன் திரு S . நேசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி திரு R . முரளீஸ்வரன் (பணிப்பாளர் ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு) அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற 32 தமிழ் முன்னணி கழகங்களை இணைத்து தமிழ் கழகங்களின்
சினேகபூர்வத்தையும் கிரிக்கெட் துறையினையும் முன்னெடுப்பதற்காகவும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த சுற்றுப்போட்டிக்கு சின்னத்தம்பி கருணாநிதி குடும்பம் அவர்களுடைய முழு அனுசரணையுடன் இடம்பெற்றது.இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு களுதாவளை கெனடி விளையாட்டு கழகமும் பொத்துவில் ப்ரீ லயன்ஸ் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டதுடன் இறுதியில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது மேலும் இந்நிகழ்வின் போது கண்ணகி அறநெறி பாடசாலைக்கான கற்றல் உபகரணங்களை அமரத்துவத்துவமடைந்த சீனித்தம்பி கண்ணம்மை ஞாபகார்த்தமாக குடும்பத்தினரால் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தனர் அதேபோன்று விவேகானந்தா விளையாட்டு கழகத்தினால் கல்வி சாதனையாளர்களுக்கான பாராட்டு விழாவும் வைத்திய துறையில் சேவை நலன் புரிந்தவைத்திய கலாநிதி
திரு R . முரளீஸ்வரன் (பணிப்பாளர் ஆதார வைத்தியசாலை
கல்முனை வடக்கு) ,நிகழ்வின் கௌரவ அதிதி பொதுவைத்த்திய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.ந.அகிலன் ஆகியோர் இந்நிகழ்வில் பொன்னாடை போற்றி விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டதுடன்
மேலும் இந்த சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூபாய் 30,000 பணப்பரிசும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு ரூபாய் 20000 பணப்பரிசும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்ற தாண்டியடி சுப்பகிற் அணிக்கு பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதிகள் கௌரவ அதிதி என பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு இறுதியில் கழகத்தின் கௌரவ செயலாளர் K . உமாரமணன் அவர்களுடைய நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.



 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages