கல்முனை வடக்கு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இடம்பெற்றது - Karaitivu.org

Post Top Ad

திங்கள், 10 ஏப்ரல், 2023

demo-image

கல்முனை வடக்கு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இடம்பெற்றது

Responsive Ads Here

 இந்து ஆலயங்களின் விபரத்திரட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டசெயலகம் இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் தொடர்பான  விபரங்களை திறட் டும்  நோக்குடன்  ஆலயங்களின் அடிப்படைத்தகவல்கள்,ஆலயத்தின் வரலாற்றுத்தகவல்கள், ஆலய மூர்த்தங்கள் தொடர்பான விபரங்கள்,ஆலய உடகட்ட அமைப்பு தொடர்பான தகவல்கள்,ஆலயத்தின் வழிபாடு தொடர்பான் விடையங்கள்,ஆலய நிர்வாகம் தொடர்பான விபரங்கள்,ஆலய குருமார் தொடர்பான"விபரங்கள்,ஆலயத்தின் துணை நிறுவனங்கள் தகவல்கள் அதாவது அறநெறிப்பாடசாலை, திருப்பணிச்சபை, அன்னதானசபை, இளைஞர் மன்றங்கள் தொடர்பான விபரங்கள்"ஆலயத்தின் நிதி தொடர்பான விபரங்கள் ஆலய பிணக்குகள் தொடர்பான தகவல்கள்,ஆலயத்தினால் முன்னேடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்கள்

கல்விப்பணி,சமூகப்பணி,சமயப்பணி, ஆலய அமைவிடம் தொடர்பான   தவல்களை திறட்டும் நோக்குடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டளில் மாவட்ட செயலகமானது பிரதேச செயலகம் ரிதியாக இச்செயற்பாட்டை முன்னேடுத்து வருகின்றது 

அந்த வகையில் கல்முனை வடக்கு மற்றும் நாவிதன்வெளி  பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இடம்பெற்றதுடன் இந்நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு வே. ஜெகதீசன் தலமையில் இடம்பெற்றது. இதில்  மாவட்ட இந்தகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி,  கல்முனை வடக்கு இந்து  கலாசார"உத்தியோகத்தர்கள் திருமதி க.சுஜித்தாரா,திருமதி நா.சிறிப்பிரியா,நாவிதன்வெளி"இந்துகலாசார"அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.நீலோந்திரன் மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள், நிர்வாகசபையினர் கலந்து கொண்டனர்

336401937_1269402003704806_673657264450658952_n

336363752_679473230847740_4714198466744236434_n

336249713_1998712413802988_3601970607107480752_n

336192597_603508021411043_3781399350669312777_n

Post Bottom Ad

Pages