வேலோடுமலையில் களைகட்டிய தீர்த்தோற்சவம் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 10 ஏப்ரல், 2023

வேலோடுமலையில் களைகட்டிய தீர்த்தோற்சவம் !

 


வேலோடுமலையில் களைகட்டிய தீர்த்தோற்சவம்!
( வி.ரி.சகாதேவராஜா)

"ஈழத்து பழனி" என அழைக்கப்படும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம்  05 ஆம் தேதி புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தொடர்ச்சியாக ஆறு நாட்கள் ஆயிரம் அடியார்களுடன்  இடம்பெற்று வந்த திருவிழா இன்று ஏழாம் நாள் புதன்கிழமை ஆலய தர்மகத்தா சுப்ரமணியம் தியாகராஜா முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

பிரதம குரு சிவஸ்ரீ கு.க. அரவிந்த குருக்கள் தலைமையில் நேற்று காலை பத்து மணியளவில் மலையடிவாரத்திலுள்ள  தீர்த்தக் கிணற்றில்  இடம் பெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக இம்முறை தீர்த்தம் இடம் பெற்றது.

ஆலய தர்மகத்தா சுப்ரமணியம் தியாகராஜா , துணைவியார் சந்திரா தியாகராஜா,சித்தர்கள் குரல் அமைப்பின் சார்பில் ஆலய பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ,ஆலய பிரமுகர்களான வேல்சாமி ,முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூஜைகளிலும் தீர்த்த கிரியைகளிலும் கலந்து சிறப்பித்தனர்.

வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்  அலங்கார தேர்களில் விநாயகர் சகிதம் ஆரோகணித்து 
நாதஸ்வரம் மேளதாளத்துடன் வலம் வந்து தீர்த்தமாடினார்.

கிழக்கின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து திருவிழாக்களிலும் தீர்த்தோற்சவத்திலும் கலந்து கொண்டனர்.

தீர்த்தோற்சவத்தின் நிறைவில் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 சித்தாண்டி மாவடி வேம்பு கொம்மாதுறை தேவபுரம் கோரலங்கேணி வந்தாறுமூலை மற்றும் ஆலயதிருவிழா குழுவினரால் இந்த ஏழு நாள் திருவிழாக்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages